நுண்ணிலை கற்பித்தல் மற்றும் பெருநிலை கற்பித்தல் இடையேயான வேறுபாடுகள்

 

நுண்ணிலை கற்பித்தல்(MICRO TEACHING) மற்றும் பெருநிலை கற்பித்தல்(MACRO TEACHING) இடையேயான வேறுபாடுகள்:

.எண்

நுண்ணிலை கற்பித்தல்

பெருநிலை கற்பித்தல்

1

நுண்ணிலை கற்பித்தல் என்பது பயிற்சி () கற்பித்தல் நுணுக்கம் ஆகும்.

பெருநிலை கற்பித்தல் என்பது உண்மையான கற்பித்தல் ஆகும்.

2

நுண்ணிலை கற்பித்தலில் தவறுகள் நடைபெறலாம்.

பெருநிலை கற்பித்தலில் தவறுகள் நடைபெறுவது சரியானது அல்ல.

3

நுண்ணிலை கற்பித்தலில் தவறுகளை உற்று நோக்கி திருத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

பெருநிலை கற்பித்தலில் தவறுகளை உற்று நோக்கி திருத்திக் கொள்ள வாய்ப்புகள் இல்லை.

4

நுண்ணிலை கற்பித்தல் என்பது கற்பித்தலுக்கான பயிற்சியை பெறும் புதிய முறையாகும்.

பெருநிலை கற்பித்தல் என்பது உண்மையான மாணவர்களுக்கு உண்மையான கற்பித்தலை வழங்குவது ஆகும்.

5

நுண்ணிலை கற்பித்தலில் 5 முதல் 7 நிமிடங்கள் மட்டுமே பயிற்சி நடைபெறும்.

பெருநிலை கற்பித்தலில் 40 முதல் 50 நிமிடங்கள் வரை கற்பித்தல் நடைபெறும்.

6

நுண்ணிலை கற்பித்தலில் 5 முதல் 7 மாணவர்கள் மட்டுமே இடம் பெற முடியும்.

பெருநிலை கற்பித்தலில் 40 முதல் 60 மாணவர்கள் இருக்கலாம்.

7

ஒரே ஒரு திறனில் மட்டுமே பயிற்சி பெறப்படுகிறது.

பல்வேறு திறன்களை பயன்படுத்தி கற்பித்தல் நடை பெறுகிறது.

8

ஒரு பாடத்தின் குறிப்பிட்ட கருத்துகள் மட்டுமே விளக்கப்படுகிறது

ஒரு பாடத்தின் பல்வேறு கருத்துகள் விளக்கப்படுகிறது

 

 

9

நுண்ணிலை கற்பித்தலின் படிநிலைகள்:

  • திட்டமிடுதல்
  • கற்பித்தல்
  • பின்னூட்டம்
  • மீண்டும் திட்டமிடுதல்
  • மீண்டும் கற்பித்தல்
  • மீண்டும் பின்னூட்டம்

பெருநிலை கற்பித்தலின் படிநிலைகள்:

  • ஊக்கப்படுத்துதல் (MOTIVATION)
  • பாடக்கருத்துக்களை வழங்குதல்(PRESENTATION)
  • பயன்படுத்துதல்(APPLICATION)
  • தொகுத்துக்கூறுதல் (SUMMARIZING)
  • ஒப்படைப்பு(ASSIGNMENT)

10

நுண்ணிலை கற்பித்தலில் உடனுக்குடன் பின்னூட்டம் வழங்கப்படுகிறது.

பெருநிலை கற்பித்தலில் பின்னூட்டம் வழங்கப்படுவது இல்லை.

11

நுண்ணிலை கற்பித்தல் மிக எளிமையான முறையாகும்.

பெருநிலை கற்பித்தல் கடினமான முறையாகும்.

12

நுண்ணிலை கற்பித்தலில் திறன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

பெருநிலை கற்பித்தலில் பாடக் கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

13

நுண்ணிலை கற்பித்தல் முறை பயிற்சி பெறும் ஆசிரியருக்கு எளிமையான முறையாகும்

பெருநிலை கற்பித்தல் முறை பயிற்சி பெறும் ஆசிரியருக்கு கடினமான முறையாகும்.

14

நுண்ணிலை கற்பித்தல் பயிற்சி முறையில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.

பெருநிலை கற்பித்தலில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை குறைகிறது.

 

          ஒரு மிகச்சிறந்த ஆசிரியராக வேண்டுமெனில் நுண்ணிலை கற்பித்தலில் முழுமையான பயிற்சியை பெற வேண்டும்.

Comments

Popular posts from this blog

ENHANCING PROFESSIONAL CAPACITIES (EPC)-3 CRITICAL UNDERSTANDING OF INFORMATION AND COMMUNICATION TECHNOLOGY RECORD IN ENGLISH