நுண்ணிலை கற்பித்தல் சுழற்சி

 நுண்ணிலை கற்பித்தல் சுழற்சி

 


 
திட்ட மிடுதல்:

மாணவர்களுக்கு நடத்தும் பாடத்தினை முன்கூட்டியே எவ்வாறு, எப்படி, எந்த வழிமுறையை பயன்படுத்தி நடத்துவது என்பதை மனதில் நினைத்து திறம்பட திட்டமிடுதல் வேண்டும்.

கற்பித்தல்:

கற்பித்தல் முறையில் பயிற்சி பெறும் மாணவர்கள் 5 முதல் 7 மாணவர்கள், 5 முதல் 7 நிமிடம் ஒரே ஒரு திறனையும் அதன் உட்கூறுகளையும் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட கருத்தை கற்பித்தல் வேண்டும். இம்முறையில் கற்பித்தல் பயிற்சி நடைபெறும் போது அதை உற்று நோக்குவதற்கு ஒரு கல்வியாளர் மற்றும் உடன் பயிலும் மாணவர்கள் இருக்க வேண்டும்.

பின்னூட்டம்:

பயிற்சி பெறும் மாணவர் கற்பித்தலை முடித்த பின்பு உற்று நோக்குபவர்கள் கற்பித்தல் பற்றிய பின்னூட்டத்தை வழங்க வேண்டும்.

மீண்டும் திட்டமிடுதல்:

ஊற்று நோக்குபவர் பின்னூட்டம் வழங்கிய பின் அதில் ஏதேனும் குறை இருப்பின் அதை சரி செய்து மீண்டும் ஒருமுறை திட்டமிடுதல் வேண்டும்.

மீண்டும் கற்பித்தல்:

இம்முறையில் மீண்டும் திட்டமிட்டதை பயிற்சி பெறும் மாணவர்கள் 5 முதல் 7 நிமிடங்கள், 5 முதல் 7 மாணவர்களுக்கு ஒரு திறனையும், அதன் உட்கூறுகளையும் பயன்படுத்தி ஒரே ஒரு குறிப்பிட்ட கருத்தை கற்பித்தல் வேண்டும்.

மீண்டும் பின்னூட்டம்:

இம்முறையில் உற்று நோக்குபவர் மீண்டும் பின்னூட்டம் வழங்கிய பின் அதில் ஏதேனும் குறை இருப்பின் அதை சரி செய்து மீண்டும் ஒரு முறை திட்டமிடுதல் வேண்டும்.


Comments

Popular posts from this blog

ENHANCING PROFESSIONAL CAPACITIES (EPC)-3 CRITICAL UNDERSTANDING OF INFORMATION AND COMMUNICATION TECHNOLOGY RECORD IN ENGLISH