நுண்ணிலை கற்பித்தல் சுழற்சி
நுண்ணிலை கற்பித்தல் சுழற்சி திட்ட மிடுதல் : மாணவர்களுக்கு நடத்தும் பாடத்தினை முன்கூட்டியே எவ்வாறு , எப்படி , எந்த வழிமுறையை பயன்படுத்தி நடத்துவது என்பதை மனதில் நினைத்து திறம்பட திட்டமிடுதல் வேண்டும் . கற்பித்தல் : கற்பித்தல் முறையில் பயிற்சி பெறும் மாணவர்கள் 5 முதல் 7 மாணவர்கள், 5 முதல் 7 நிமிடம் ஒரே ஒரு திறனையும் அதன் உட்கூறுகளையும் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட கருத்தை கற்பித்தல் வேண்டும் . இம்முறையில் கற்பித்தல் பயிற்சி நடைபெறும் போது அதை உற்று நோக்குவதற்கு ஒரு கல்வியாளர் மற்றும் உடன் பயிலும் மாணவர்கள் இருக்க வேண்டும் . பின்னூட்டம் : பயிற்சி பெறும் மாணவர் கற்பித்தலை முடித்த பின்பு உற்று நோக்குபவர்கள் கற்பித்தல் பற்றிய பின்னூட்டத்தை வழங்க வேண்டும் . மீண்டும் திட்டமிடுதல் : ஊற்று நோக்குபவர் பின்னூட்டம் வழங்கிய பின் அதில் ஏதேனும் குறை இருப்பின் அதை சரி செய்து மீண்டும் ஒருமுறை திட்டமிடுதல் வேண்டும் . மீண்டும் கற்பித்தல் : இம்முறையில் மீண்டும் திட்டமிட்டதை பயிற்சி பெறும் ...