மின் உள்ளடக்கம் தயாரித்தல் மற்றும் வெவ்வேறு ICT கருவிகளைக் கொண்டு அவற்றை வகுப்பில் பயன்படுத்துதல் தொடர்பான அறிக்கை முன்னுரை பழங்காலம் முதலே மாணவர்கள் அறிவை பெற நூலகம் மற்றும் பல துறை சார்ந்த நூல்களை ஆய்வு செய்தும் வந்தனர். இதன் அடிப்படையிலேயே வகுப்புகளும் நடைபெற்றன. ஆனால் தற்போது மின் உள்ளடக்க முறை மூலமாக மாணவர்கள் மட்டுமின் றி ஆசிரியர்களும் தான் இருக்கும் இடத்திலேயே தகவல்களை உண்மையாகவும், புதுமையாகவும் பெறுகின்றனர். இதற்கு உறுதுணையாக இருக்கும் மின் உள்ளடக்க சாதனங்களையும் அவற்றின் பயன்களையும் பார்ப்போம். மின் உள்ளடக்க மின் உள்ளடக்க முறை என்பது டிஜிட்டல் கல்வியின் ஒரு அங்கமாகும் . இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருவரையும் தொலைதூரத்தில் இருந்து தகவல்களை நேருக்கு நேர் பரிமாறிக் கொள்ளவும் , அறிவை பெறுவதற்கும் ஆதரவாக ...