EPC - 3 TASK AND ASSIGNMENT

மின் உள்ளடக்கம் தயாரித்தல் மற்றும் வெவ்வேறு ICT கருவிகளைக் கொண்டு  அவற்றை வகுப்பில் பயன்படுத்துதல் தொடர்பான அறிக்கை

முன்னுரை

                     பழங்காலம் முதலே மாணவர்கள் அறிவை பெற நூலகம் மற்றும் பல துறை சார்ந்த நூல்களை ஆய்வு செய்தும் வந்தனர். இதன் அடிப்படையிலேயே வகுப்புகளும் நடைபெற்றன. ஆனால் தற்போது மின் உள்ளடக்க முறை மூலமாக மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் தான் இருக்கும்  இடத்திலேயே தகவல்களை உண்மையாகவும்,  புதுமையாகவும் பெறுகின்றனர். இதற்கு உறுதுணையாக இருக்கும் மின் உள்ளடக்க சாதனங்களையும் அவற்றின் பயன்களையும் பார்ப்போம்.

மின் உள்ளடக்க


                    மின் உள்ளடக்க முறை என்பது டிஜிட்டல் கல்வியின் ஒரு அங்கமாகும். இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருவரையும் தொலைதூரத்தில் இருந்து தகவல்களை நேருக்கு நேர் பரிமாறிக் கொள்ளவும், அறிவை பெறுவதற்கும் ஆதரவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


மின்-உள்ளடக்க முறையின் பயன்கள்

  1. ஆசிரியரின் கண்ணோட்டத்தில் மின் உள்ளடக்கத்தின் மிக முக்கியமான பாத்திரங்களில் ஒன்று மாணவர்களை செயல்படுத்துவதிலும் கற்றலில் ஆர்வத்தை தூண்டுவதிலும் உள்ளது.
  2. மேலும் கற்றல் செயல்முறையின் தனிப்படுத்தலை வலுப்படுத்துவதிலும் அவர்களுக்கு ஆதரவளிப்பதாகும்.
  3. மின் உள்ளடக்கத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு வீடியோ மற்றும் ஆடியோ உடன் நடத்தப்படும் வகுப்புகள் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
  4. மின் உள்ளடக்க முறை என்பது ஒரு கற்பித்தல் முறை அல்ல மாறாக மாணவர்கள் தங்களின் பங்களிப்பு மற்றும் கருத்துக்களை பகிர்ந்திடவும், மேலும் பல செய்திகளை பற்றிய அறிவைப் பெறவும் இது ஒரு ஆதாரமாக இருக்கிறது.

நடைமுறையில் E-CONTENT

            டிஜிட்டல் கல்வியில் E-CONTENT  என்பது கல்வி உள்ளடக்கத்தை வழங்குதற்கான ஒரு வடிவம் மட்டுமல்ல. வெளியீட்டாளரின் பார்வையில் வீடியோ, ஆடியோ மற்றும் பலவற்றின் மூலம் மாணவர்களை சுறுசுறுப்பாகச் செய்ய ஊக்குவிக்கும் அனைத்து பொருட்களும் ஆகும்.

மின் உள்ளடக்கு முறையை பயன்படுத்துவதால் மாணவர்கள் பெரும் நன்மைகள்
  • மாணவர்களுக்கு மிகவும் வசதியான கற்றலைப் பெறலாம்.
  • ஆசிரியர்கள் பலர் E-CONTENT  முறையை ஆதரிக்கின்றனர்.
  • வேதியியல் பாடங்களில் கோட்பாடு அறிவு மற்றும் ஒரு வகுப்பறையில் செயல்படுத்த கடினமாக இருக்கும்.
  • அவற்றை எளிய வடிவில் அற்புதமான விளக்கங்களுடன் மாணவர்களுக்கு வீடியோ மூலம் பதிவுகளை விளக்கி கூறப்படுகிறது.
  • மாணவர்கள் அதிக கவனத்துடன் பங்கேற்கிறார்கள்.
  • வகுப்புகளில் கலந்துகொள்ள அதிக விருப்பத்துடன் உள்ளனர்.
  • மாணவரின் செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது.
  • தகவமைப்பு கற்றலுக்கான பொருட்களை உருவாக்கும் திறனை   E-CONTENT  முறை மட்டுமே வழங்குகிறது.
  • மாணவர்களின் கல்விச் செயல்முறையின் அதிகபட்ச தனிப்பயனாக்கத்தை வலியுறுத்துகிறது.
  • மாணவர்களின் முன்னேற்றத்தை இது உக்குவிக்கிறது.
  • பாடப்புத்தகங்கள் மின்னணு சாதனங்களில் கிடைக்கின்றன.
  • மடிக்கணிணிகள், தொலைபேசிகள், டேப்லெட்டுகள் பெரும்பாலும் ஹாட்ஸ்பாட்டுகள் இணைக்கப்பட்ட  PDF  வடிவங்களில் வழங்கப்படுகிறது.
  • E-CONTENT  முறை மூலம் மாணவர்கள் உள்ளடக்கத்தை நன்றாக நினைவில் கொள்கிறார்கள்.
ஆசிரியர்கள் வரவேற்பு
  • உலகில் எங்கும், எந்த நேரத்திலும் அறிவை பெற E-CONTENT  முறை உதவுகிறது.
  • திறம்பட கற்பிக்க டிஜிட்டல் முறை பெரும் உதவி புரிகிறது.
  • புதிய தீர்வுகளைப் பயன்படுத்தவும், கற்பித்தலில் ஆர்வம் அதிகரிக்கவும் இம்முறை உதவுவதால் பெரும்பாலும் ஆசிரியர்கள் இதனை விரும்புகின்றனர்.
  • ஆசிரியர்கள் E-CONTENT  முறையைப் பயன்படுத்துவதன் மூலம் தங்கள் அறிவை இன்னும் சுவாரசியமான மற்றும் ஈடுபாட்டுடன் வழங்க முடியும்.
  • ஆன்லைன் (அ) PPT முறைகள் பயன்படுத்துவது அவர்களின் வேலையை எளிதாகவும் பயன் உள்ளதாகவும் ஆக்குகிறது.
  • மாணவர்களுக்கு படைப்பாற்றல் திறன் அதிகரிக்க ஆசிரியர்கள் E-CONTENT  முறையை பயன்படுத்துகின்றனர்.
  • பாடத்தின் முன்னறிவை பெற E-CONTENT  முறை மிகவும் உறுதுணையாக இருக்கிறது.
  • இது உயர் தரத்தை வழங்கும் தீர்வு (அ) தரவு என்பதால் ஆசிரியர்கள் பெரும்பாலானோர் இதனை வரவேற்கின்றனர்.
  • குறைந்த நேர அணுகல் ஆனால் காகித பாடப்புத்தகங்களை விட மிக சிறந்த அறிவை தருகிறது.

மின் உள்ளடக்கத்தை பயன்படுத்தி வகுப்பில் பாடம் எடுத்ததில் நான் பெற்றுக் கொண்ட அனுபவம்

  • பல்வேறு தகவல் தொடர்பு தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி வகுப்புகளை எடுத்தது புதிய அனுபவத்தை கொடுக்கிறது.
  • மாணவர்கள் பாட கருத்தை மிக எளிமையாக புரிந்து கொண்டனர்.
  • ஆடியோ, வீடியோ மற்றும் அனிமேஷன்களை பயன்படுத்தி வகுப்புகள் எடுத்தது நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
  • குறைந்த காலத்தில் மிக அதிகப்படியான தகவல்களை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துரைக்க தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கருவி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
முடிவுரை

        இவ்வாறு பல பயன்கள் E-CONTENT மூலம் பெறப்படுகிறது. மாணவர்கள் ஆசிரியரின் உதவி இன்றி சுயமாகவே புதிய அறிவை பெற உதவுகிறது. ஆகையால் E-CONTENT  முறை மாணவர்களுக்கு கிடைத்த வரமாகும். E-CONTENT  முறை மூலம் COMPUTER APPLICATIONS பற்றிய அறிவை பெற முடிகிறது. மேலும் நுண்ணறிவு, படைப்பாற்றல் திறன் போன்றவற்றை உருவாக்கும் புதிய சமுதாயத்தை உருவாக்க பயன் படுகிறது.

கல்வி நிபுணருடன் வீடியோ கான்பிரன்சிங் அமைப்பு பற்றிய அறிக்கை

முன்னுரை:

மாற்றம் என்பதே மாறாததுஎன்பதற்கேற்ப பல தொழில் நுட்ப மாற்றங்களை இவ்வுலகமானது நிகழ்த்தி வருகிறது. இதனால் கல்வியிலும் பல தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது கல்வியில் வீடியோ  கான்பிரசிங்கை புகுத்தியதாகும்.

வீடியோ கான்பிரன்சிங்:

வீடியோ கான்பிரன்சிங் என்பது கைபேசிமடிக்கணிணி மற்றும் வீடியோ  இணைக்கப்பட்ட சாதனங்களின் மூலம் இணையத்தை பயன்படுத்தி ஆடியோவீடியோஉரைமற்றும் விளக்க காட்சிகளின் மூலம் வெவ்வேறு இடங்களில் உள்ள நபர்களை நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் ஒரு தொழில் நுட்பமாகும்.

கல்வியில் வீடியோ கான்பிரன்சிங்கின் முக்கியத்துவம்:

  • தொலைதூரக்கல்வி பயில்வோருக்கு மிகவும் பயனுள்ள வகையில் வீடியோ கான்பிரன்சிங் செயல்படுகிறது. இதன் மூலம் வெவ்வேறு இடங்களில் உள்ள மாணவர்கள் ஒரே நேரத்தில் கல்வி கற்க முடியும்.
  • மேலும் கல்வி மாநாடுகள் நடத்த பெரும் உதவியாக உள்ளது. இதன் மூலம் எண்ணற்ற மாணவர்களின் பயன் பெறும் வாய்ப்பு ஏற்படுகிறது.
  • தற்போது ஏற்பட்ட கொரானா போன்ற பெருந்தொற்று சூழலிலும் கூட அனைத்து மாணவர்களும் தங்கள் கல்வியை தொடர இத்தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் பேருதவியாக இருந்தது.
  • மேலும் இத்தொழில்நுட்பம் குறைவான பணம் மற்றும் நேரத்தின் மூலம் அதிகபட்சமான பலனை கல்விக்கு வழங்கி வருகிறது.
  • கொரோனா தொற்றிற்கு பிறகு 87% மக்கள் பல்வேறு செயல்களுக்காக வீடியோ கான்பிரன்சிங்கை பயன்படுத்துகின்றனர்.

வீடியோ கான்பிரன்சிங்கிற்கு பயன்படுத்தப்படும் செயலிகள்:

GOOGLE MEET:

  • இச்செயலியானது மிகவும் பிரபலமான மற்றும் சுலபமாக மாணவர்கள் அணுகக்கூடிய ஒரு செயலியாக உள்ளது. இச்செயலியில் வீடியோ கான்பிரன்சை அமைக்க வேண்டுமெனில் ஆசிரியர் அந்த மீட்டிங் லிங்க்கை மாணவர்களிடம் பகிர வேண்டும். பிறகு ஆசிரியர் வந்தவுடன் மாணவர்களை அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அனுமதிப்பதன் மூலம் வெளிநபர்கள் யாரும் பங்கேற்க முடியாது.
  • இச்செயலியின் மொத்த பயனர்களின் எண்ணிக்கை 100 ஆகும். இச்செயலியின் மூலம் நடைபெறும் மீட்டிங்கானது வீடியோ, ஆடியோ மற்றும் விளக்கக் காட்சிகளை காண்பிப்பதற்கான வசதிகளுடன் சிறப்பான ஒரு சேவையை மாணவர்களுக்கு வழங்குகிறது.
  • மேலும் மீட்டிங் நடைபெறும் போதே Chating  மூலம் தொடர்புகொள்ளவும் வசதியும் உள்ளது. இது போன்ற பல்வேறு வசதிகளுடன் GOOGLE MEET செயலியானது கல்வியில் பெரும் பயனை ஏற்படுத்துகிறது.

ZOOM:

  • இது ஒரு இலவச வீடியோ கான்பிரன்சிங் செயலியாகும். செயலியின் மீட்டிங்கிள் சேருவதற்கு Meeting- கான  URL  அனுப்பப்பட வேண்டும். அனுப்பப்படும் URL – பயன்படுத்தி மற்றவர்கள் உள் நுழைவார்கள்.
  • இச்செயலியில் ஆடியோ, வீடியோ மற்றும் விளக்கக் காட்சி ஆகியவற்றை எளிதாக பகிரலாம். மேலும் இலவசமாக 100 பயனர்களுடன் 40 நிமிடம் கூட்டத்தை நடத்த இயலும்.
  • இச்செயலியில் நடைபெறும் நிகழ்வுகளை பதிவு செய்யும் படியும் அமைந்துள்ளது. இது ஒரு பாதுகாப்பான வீடியோ கான்பிரன்சிங் செயலியாகும்.

MICROSOFT TEAM:

  • இச்செயலியானது GOOGLE MEET  மற்றும் ZOOM செயலிகளை விட அதிக தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இச்செயலியின் மூலம் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் இணைந்து ஆன்லைன் வழியில் கல்வி கற்க முடியும்.
  • நேரலை வகுப்பு அமர்வுகள், உரை மற்றும் குரல் அட்டை, காலண்டர்கள் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இது மாணவர்களுக்கு ஒரு சிறப்பான ஆன்லைன் கற்றலை வழங்குகிறது.

TEACH MINT:

  • இது ஒரு சிறந்த வீடியோ கான்பிரன்சிங் செயலியாகும். இந்த செயலியானது MAY 2020 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் 100 முதல் 200 மாணவர்கள் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.
  • இந்த செயலியில் காலண்டர் மற்றும் நேரலை வகுப்பு அமர்வுகள், உரை மற்றும் குரல் அட்டை போன்ற சிறந்த அம்சங்கள் காணப்படுகின்றன.

MY HOME WORK:

  • இது வீடியோ கான்பிரன்சிங் தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னணியாக உள்ள செயலியாகும். இந்த செயலியில் வீடியோ கான்பிரன்சிங்கில் இணைவதற்கு URL லிங்க் பயன்படுத்தப்படுகிறது.
  • இந்த செயலியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்  கோப்புகள் மற்றும் அறிவிப்புகளை எளிதாக பகிர முடியும். மேலும் இது வாரம் அல்லது மாதத்தின் அடிப்படையில் வகுப்புகளை ஆன்லைனில் பார்க்க உதவுகிறது. மேலும் மாணவர்களுக்கு நினைவூட்டல் என்ற அம்சம் மூலம் தனது வேலைகளை நினைவுபடுத்துகிறது.
  • இது 60 க்கும் மேற்பட்ட சிறப்பு அம்சங்களுடன் செயல்படும் ஒரு தளமாகும்.

    முடிவுரை:

வீடியோ கான்பிரன்சிங் செயலிகளின் மூலம் தொலைதூர கல்வி மற்றும் ஊரடங்கு காலங்களில் மாணவர்களின் கற்றலை தொடர மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. மேலும் பல்வேறு தொழில் முனைவோருக்கு மிகவும் பயனுள்ளதாகவும் செயல்படுகிறது.

 



Comments

Popular posts from this blog

ENHANCING PROFESSIONAL CAPACITIES (EPC)-3 CRITICAL UNDERSTANDING OF INFORMATION AND COMMUNICATION TECHNOLOGY RECORD IN ENGLISH